Nigazhvu News
29 May 2025 12:40 AM IST

புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு - மத்திய அமைச்சராகிறார் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன்

Copied!
Nigazhvu News

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அதிரடியாக விரிவாக்கப்பட்டுள்ளது. அதில் புதிதாக 43 பேர் அமைச்சரவையில் இடம்பெறலாம் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளவர்களின் பெயர்கள்  வெளிவந்துள்ளது. சர்பானந்தா சோனாவால், ஜோதிராதித்யா சிந்தியா, ராஜீவ் சந்திரசேகர், தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகன் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர். 

2019 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாகத் தொடர்ந்து, நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க   பதவியேற்றது. அமைச்சரவையில் 81 பேர்  இடம்பெறலாம் என்ற நிலையில் தற்போது, 53 பேர் மட்டுமே  அமைச்சர்களாக உள்ளனர். இன்னும் 28 பேரைப் புதிதாக அமைச்சரவையில்  சேர்க்க முடியும். விரைவில் உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில  மாநிலங்களுக்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதைக் கருத்தில் கொண்டு மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என, கடந்த சில சில நாட்களாகச் செய்திகள் வெளிவந்தது.

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தைத்  தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ்வர்தன், ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் கங்வார், பாபுல் சுப்ரியோ, சதானந்தா கவுடா உள்ளிட்ட 11 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் புதிதாக 43 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளனர். 

புதிய அமைச்சர்கள் பட்டியலில்  பிற்படுத்தப்பட்டோர்,  தாழ்த்தப்பட்ட மற்றும்  பழங்குடியினர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பதற்கு முன்பாக, பிரதமர் மோடியை சந்தித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

புதிய அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் முழு விவரம் பின்வருமாறு:-

  1. நாராயணன் தானு ராணா
  2. சர்பானந்தா சோனாவால்
  3. டாக்டர் விரேந்திர குமார்
  4. ஜோதிராதித்யா எம். சிந்தியா
  5. ராமச்சந்திர பிரசாத் சிங்
  6. அஸ்வின் வைஷ்ணவ்
  7. பசு பட்டி குமார் பராஸ்
  8. கிரண் ரிஜிஜு
  9. ராஜ்குமார் சிங்
  10. ஹர்தீப் சிங் பூரி
  11. மன்சுக் மாண்டவியா
  12. பூபிந்தர் யாதவ்
  13. புருஷோத்தம் ரூபாலா
  14. ஜி.கிஷன் ரெட்டி
  15. அனுராக் சிங் தாக்கூர்
  16. பங்கஞ் சவுத்ரி
  17. அணுப்பிரியா சிங் படேல்
  18. சத்தியபால் சிங் பாகெல்
  19. ராஜீவ் சந்திரசேகர்
  20. ஷோபா கரந்தலஜே
  21. பானு பிரதாப் சிங் வர்மா
  22. தரிஷன விக்ரம் ஜர்தோஷ்
  23. மீனாக்ஷசி லேகி.
  24. அன்னபூர்ணா தேவி
  25. நாராயணசுவாமி
  26. கௌசல் கிஷோர்
  27. அஜய் பட்
  28. பி.எல் வர்மா
  29. அஜய் குமார்
  30. சவுகான் தேவ சீன்
  31. பகவாந்த் குபா
  32. கபில் மோரேஷ்வர் பாட்டில்
  33. சுஷிர் பிரதிமா பூமிக்
  34. டாக்டர் சுபாஷ் சர்க்கார்
  35. டாக்டர் பகவத் கிஷன் ராவ் காரத்
  36. ராஜ்குமார் ரஞ்சன் சிங்
  37. பாரதி பிரவீன் பவார்
  38. பிஷ்வேஷ்வர் துடு
  39. சாந்தனு தாக்கூர்
  40. மஞ்சாபரா மகேந்திர பதி
  41. ஸ்ரீ ஜான் பர்லா
  42. எல். முருகன்
  43. நஷீத் பிரமானிக்

இவர்கள் அனைவரும்  இன்று மாலை 6 மணிக்கு பொறுப்பேற்க உள்ளனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக களமிறங்கிய அவரது தங்கை ஷர்மிளா : புதிய கட்சித் தொடக்கம்

Copied!

அண்மை செய்திகள்

மித்ரன்

மழை வெள்ளத்தால் சேதமான நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

மித்ரன்

கிருஷ்ணரை வரைவதில் பெயர்பெற்ற ஜஸ்னா சலீம் வரைந்த கிருஷ்ணர் புகைப்படம் கோயில் கருவறையில் சமர்ப்பணம்

மித்ரன்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவி பெற புதிய இணையதளம் அறிமுகம்

விஜயநேத்ரன்

கார்கில் வெற்றி தினம் - 22 வது விஜய் திவாஸ் கொண்டாட்டம்

மித்ரன்

ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக களமிறங்கிய அவரது தங்கை ஷர்மிளா : புதிய கட்சித் தொடக்கம்