Nigazhvu News
29 May 2025 1:57 AM IST

கிருஷ்ணரை வரைவதில் பெயர்பெற்ற ஜஸ்னா சலீம் வரைந்த கிருஷ்ணர் புகைப்படம் கோயில் கருவறையில் சமர்ப்பணம்

Copied!
Nigazhvu News

கிருஷ்ணரை வரைவதில் பெயர்பெற்ற ஜஸ்னா சலீம் வரைந்த கிருஷ்ணர் புகைப்படம் கோயில் கருவறையில்  சமர்ப்பணம்

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஜஸ்னா சலீம் (28). இஸ்லாமிய பெண்மணியான இவர் கிருஷ்ணர் படங்களை சிறப்பாக வரைந்ததால் மக்களிடையே பிரபலமானார்.

ஓவியம் தீட்டுவதில் ஆர்வமிக்கவரான ஜஸ்னாவின் கவனம், கிருஷ்ணர் படங்களை வரைய விரும்பினார். இயல்பாக கிருஷ்ணர் படங்களை வரையத் தொடங்கிய அவருக்கு, பின்னர் அதுவே மிகப் பிடித்தமான ஒன்றாக மாற பல படங்களை தீட்டத் தொடங்கினார். இப்படியே  500க்கும் மேற்பட்ட கிருஷ்ணர் ஓவியங்களை கடந்த 6 ஆண்டுகளில் தீட்டி இருக்கிறார். 

இப்படியே கிருஷ்ணர் படங்களை வரைந்த அவருக்கு உள்மனதில் ஓர் ஆசை எழுந்தது. அந்த ஆசை என்னவெனில், கோவிலில் அவரது ஓவியத்தை இறைவனிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்பதே ஆகும். அவரது நீண்ட நாள் கனவு இப்போது நினைவாக உள்ளது. அவர் வரைந்த வெண்ணெய் பானையுடன் அமர்ந்திருக்கும் குழந்தை கிருஷ்ணரின் ஓவியம் சமூக வலைத்தளங்களில் வைரலானதுதான், அவரது கனவை நிறைவேற்றியுள்ளது.

அந்த ஓவியத்தை இணையத்தில் கண்ட பந்தளத்திலுள்ள உலந்து ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலை சேர்ந்த ஒரு பக்தர் குழு  ஜஸ்னாவை தொடர்பு கொண்டு வாழ்த்தி உள்ளது. அப்போது தனது ஆசையை தெரிவித்த ஜஸ்னாவின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு இறைவனிடம் ஓவியத்தை அர்ப்பணிக்க அனுமதி வழங்கியது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பத்தனம்திட்டா மாவட்டத்தின் பந்தளம் அருகே உள்ள உலந்து கிராமத்தில் உள்ள ஒரு கிருஷ்ணர் கோவிலில் , அவர் தான் வரைந்த கிருஷ்ணர் ஓவியத்தை  பகவானிடம் அர்ப்பணித்தார்.

தனது கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சியில் இருந்த ஜஸ்னா "கிருஷ்ணரை தரிசிப்பதும், என் ஓவியத்தை பகவானிடம் சமர்பிப்பதும் எனது நீண்ட கால கனவுவாக இருந்து வந்தது. பந்தளத்தில் உள்ள உலந்து ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில், எனது விருப்பம் நிறைவேறியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகளே கிடையாது. கோவில் அதிகாரிகளுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கர்ப்பமாக இருந்த காலத்தில் விழுந்ததால் ஏற்பட்ட பாதிப்பிற்கு பிறகு குணமடைந்து கொண்டிருந்த போது தற்செயலாக, பொழுது போக்கிற்காக வரையத் தொடங்கினேன். என் குழந்தை பருவத்தில் என் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்னை கண்ணா என்று அழைப்பார்கள்.

நான் ஒரு முறை செய்தித்தாளில் குழந்தை வடிவத்திலான பகவான் கிருஷ்ணரை பார்த்த பிறகு, அவர் மீது பெரும் ஈர்ப்பு ஏற்பட்டு வரையத்தொடங்கினேன். ஓவியம் மிக நன்றாக வந்திருந்தது. தன் பகவான் கிருஷ்ணரின் ஓவியத்தை வரைய தொடங்கிய காலத்தில், நான் எனது ஓவியங்களில் ஒன்றை தனது இந்து நண்பருக்கு பரிசளித்தேன்.அவர் அதை பூஜை அறையில் வைத்திருந்த நிலையில், வீட்டில், சாதகமான வகையில் நல்ல மாற்றங்கள் நிகழத் தொடங்கின " என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்

 ஜஸ்னா, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கிருஷ்ண பகவான் ஓவியத்தை பரிசளிக்க வேண்டும் என்ற தனது ஆசையையும் வெளிப்படுத்தி உள்ளார்.

இஸ்லாம் பெண்ணின் இந்த படைப்பும், அவரது கனவை நிறைவேற்றி திறமைக்கு மதிப்பளித்த கோயில் நிர்வாகத்திற்கும் வாழ்த்துகளை சமூக வலைதளங்கில் தெரிவித்து வருகின்றனர்.  இது மதநல்லிணக்கத்திற்கு சான்றாக இருப்பதாக பலரும் புகழ்ந்துள்ளனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

மழை வெள்ளத்தால் சேதமான நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவி பெற புதிய இணையதளம் அறிமுகம்

Copied!

அண்மை செய்திகள்

மித்ரன்

மழை வெள்ளத்தால் சேதமான நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

மித்ரன்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவி பெற புதிய இணையதளம் அறிமுகம்

விஜயநேத்ரன்

கார்கில் வெற்றி தினம் - 22 வது விஜய் திவாஸ் கொண்டாட்டம்

மித்ரன்

ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக களமிறங்கிய அவரது தங்கை ஷர்மிளா : புதிய கட்சித் தொடக்கம்

இராதேயன்

புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு - மத்திய அமைச்சராகிறார் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன்