சாத்தான்குளம் ஒன்றிய, நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் சாத்தான்குளம் அந்தோணி திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார்.
வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ செ.ஜோசப், பேரூராட்சி மன்ற தலைவர் ரெஜினி ஸ்டெல்லாபாய் முன்னிலை வகித்தனர் நகரச் செயலாளர் மகா இளங்கோ வரவேற்றார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆறுமுகப் பெருமாள் பங்கேற்று சிறப்புரையாற்றினார் மாவட்ட பிரதிநிதிகள் பாலசிங், சரவணன், வேல் துரை, ஒன்றிய துணைச் செயலாளர்கள் மாரியப்பன், கிருஷ்ணகுமார், நகர துணைச் செயலாளர்கள் மணிகண்டன், வெள்ளபாண்டியன், பொருளாளர் சந்திரன், வார்டு செயலாளர்கள் சுந்தர், டேனியல், பெருமாள், முருகன், அம்புரோஸ், ஜோதிஸ்டான்லி, சுடலைமுத்து, சிவராஜ், மகாராசன், மாரிமுத்து, அன்பழகன், மோசஸ், சுதாகர் சகாய செல்வகுமார், கிதிர்முகம்மது, இளைஞர் அணி முருகன் கணேசன், ஒன்றிய சிறுபான்மை அணி அமைப்பாளர் அப்துல் சமது, ஒன்றிய பிரதிநிதி அந்தோணி ராஜன், வக்கீல் பவுன்ராஜ், புதுக்குளம் சுப்பையா, தைலாபுரம் தொம்மை அந்தோணி, ஆனந்தபுரம் நெல்சன், மகளிர் அணி லைலா, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி ஸ்டான்லி நன்றி கூறினார்.
உங்கள் கருத்தை பதிவிடுக