தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது, அப்போது பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 20 பேர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் பொன்ராஜ் புதூர் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் ரவி, பாலையா, ஓன்னம்மாள் மாவட்ட பிரதிநிதிகள் சோலைசாமி, வேணுகோபால்,கார்த்திகை முருகன் உட்பட கிளை செயலாளர்கள் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக