சிலர் கட்சி ஆரம்பித்து விட்டு கொடியை டிசைன் பண்ணுவதற்கு சிக்கல் படுகிறார்கள், வேதனைப்படுகின்றனர். கோவில்பட்டியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல் மில் காலனியில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 116வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் பேசுகையில்...
தமிழகத்தில் யார் அரசியல் செய்தாலும் அதிமுகவை பேசமால் அரசியல் செய்ய முடியாது. நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பது போல முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அருமை தற்போது தான் மக்களுக்கு தெரிகிறது.
இருக்கிறத விட்டு பறப்பதற்கு ஆசை பட்ட மாதிரி பொய்யான வாக்குறுதிகள் மூலம் திமுக ஆட்சிக்கு வந்தது எப்போதும் தேர்தல் வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க மக்கள் தயாராகி விட்டனர்.
மு.க.முத்து வைத்து அரசியல் வாரிசினை முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கினார் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போல இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் வரை நிற்கிறது வாரிசு அரசியல், இன்ப நிதி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று திமுக முன்னணி தலைவர்கள் கூறிவிட்டு திமுக வேஷ்டி கட்டுவதற்கு வெட்கமில்லையா சிலர் கட்சி ஆரம்பித்து விட்டு கொடியை டிசைன் பண்ணுவதற்கு சிக்கல் படுகிறார்கள், வேதனைப்படுகின்றனர்.
தாமரையை தமிழகத்தில் பறக்கவிட்டது அதிமுக தான் முதலில் அதிமுக கொடியில் தாமரை இடம் பெற்று இருந்தது. கர்ணன் கவசம் குண்டலம் மாதிரி, ஆட்சி நிரந்தரம் என்று திமுக கூறுகிறது எதுவும் நிரந்தரம் இல்லை.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போடுகிறார்கள் டிடிசி அப்ரூவர் வாங்க ஏக்கருக்கு இவ்வளவு பணம் அமைச்சருக்கு கொடுக்க வேண்டும் என்ற நிலை திமுக ஆட்சியில் உள்ளது.
2026ல் திமுக எதிர்கட்சியாக கூட வராது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வந்து வந்து விடக்கூடாது என்பதற்காக மக்கள் இண்டியா கூட்டணிக்கு வாக்களித்தனர்.
உதயநிதி ஸ்டாலினின் சட்ட மன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு செங்கலை காண்பித்தார். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் அனைவரும் தங்கள் கையில் செங்கோல
நாளைக்கே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள். அப்படியாவது கையெழுத்து போட்டு நீட் தேர்வினை ரத்து செய்து விடுவாரா?
உதயநிதி ஸ்டாலினுக்கு எப்படியும் துண முதல்வர் பதவி கொடுத்து விடுவார்கள் திமுகவில் வாரிசு அரசியல் காரணமாக துரைமுருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
வழக்குகள் கண்டு அதிமுக பயப்படாது. 2026ல் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வந்தால் தான் தங்களுக்கு விடியல் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர் என்றார்.
உங்கள் கருத்தை பதிவிடுக