Nigazhvu News
07 Apr 2025 11:23 PM IST

பாசன குளங்களை தூர்வாரி விவசாய நிலங்களை மேம்படுத்த வேண்டும் புதிய தமிழகம் மாநில இளைஞரணி தலைவர் கோரிக்கை

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி பாசன குளங்களை தூர் வாரி விவசாய நிலங்களை மேம்படுத்த  வேண்டும் என புதிய தமிழகம் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஷ்யாம் கிருஷ்ணசாமி ஆழ்வார்திருநகரில் நடைபெற்ற அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார். 


புதிய தமிழகம் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்புவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ஆழ்வார்திருநகரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, புதி‌ய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷ்யாம் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி பேசுகையில், பெரும்பான்மை மக்கள் விவசாயம் சார்ந்து   வாழ்வதால் கடந்த வருடம் பெய்த கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  கடம்பாகுளம் பாசன விவசாய நிலங்களில் அரசே  விவசாயிகளுக்கு  வண்டல் மண் வேளாண்மைதுறை   இயந்திரம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  கட்சி வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் பேசினார். மாவட்ட செயலாளர் செல்லத்துரை, குருகாட்டூர் சுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில், கட்சியில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, வருகிற உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவர்களின் வெற்றி வாய்ப்புகள் குறித்து கலந்தாலோசித்தனர். 

கூட்டத்தில்,  புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.




பின்னர், கூட்டம் குறித்து, புதிய தமிழகம் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஷ்யாம் கிருஷ்ணசாமி கூறுகையில், புதிய தமிழகம் கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான கலந்தாய் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியபடி விவசாயிகளின் நலன் கருதி பாசன குளங்களை தூர் வாரிட வேண்டும். இக்கோரிக்கை குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியிடம் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம். என்றார் அவர்.


கூட்டத்தில்,  ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், ராஜன், மாவட்ட துணை செயலாளர் அரசை. பொண் மாவட்ட மகளிரணி செயலாளர் சரஸ்வதி, ஒன்றிய மகளிரணி செயலாளர் தனம், நகர செயலாளர்கள் பிரபாகரன், சாமுவேல், வேலவன், கிளை செயலாளர்கள் புளியங்குளம் பாண்டிய ராஜாக்கள் கோவில் பொருளாளர் பொன்மயில் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை குருகாட்டூர் சுதன் செய்து இருந்தார்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் 20 பேர் திமுகவில்இணைந்தனர்!

எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஒட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்

இராதேயன்

சாத்தான்குளத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

இராதேயன்

"தமிழனை மன்னிப்பு கேட்க வைத்ததால் இன்று நாடே பற்றி எரிகிறது" - விளாத்திகுளத்தில், கடம்பூர் ராஜூ பேச்சு!

இராதேயன்

திமுக 75 ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு நிர்வாகிகள் வீடுகளில் திமுக கொடியேற்றி கொண்டாட எம்எல்ஏ சண்முகையா அழைப்பு