பழநிமலை கோவில் வின்ச் டிக்கெட் பெற தனி இடம் : கோவில் நிர்வாகம்
பழநி தண்டாயுதபாணி கோவிலில் வின்சில் பயணம் செய்வதற்கான டிக்கெட் பெறுவதற்கு, மலையில் தனி இடத்தை ஒதுக்கியுள்ளது கோவில் நிர்வாகம்.
அறுபடை வீடுகளில் இரண்டாவது திருத்தலம் பழநி தண்டாயுதபாணி மலைக்கோயில் ஆகும். அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, மலைக்கு மேல் சென்று வர வின்ச் வசதி செய்யப்பட்டுள்ளது. இது பலருக்கும் உதவியாக இருந்து வருகிறது.
தண்டாயுதபாணியைத் தரிசிக்க வரும் பக்தர்கள் மலைக்கு சென்று வர படிப்பாதை, வின்ச், மற்றும் ரோப்கார் வசதிகள் இருக்கின்றது. கொரோனா ஊரடங்கின் தளர்விற்கு பிறகு, பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தற்போது அவர்கள் படிப்பாதை வழியாகவும், வின்ச் வழியாகவும் மலைக்கு சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் மூன்று வின்ச்கள் இயங்கி வருகின்றன.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை கணிசமாக உயர்ந்து வருகிறது. அவர்களின் பாதுகாப்புக் கருதி, கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக, வின்ச்க்கு டிக்கெட் வழங்க மலை கோயில் வெளி பிரகாரத்தில் தனிப்பகுதி ஒதுக்கியுள்ளனர்.
முருகனை தரிசித்துவிட்டு வின்சன் வழியாக கீழிறங்கும் பக்தர்கர்களுக்கு, இங்கு டிக்கெட் வழங்கி அவர்களை வின்ச் நிலையத்திற்கு அனுப்புகின்றனர். இதனால் வின்ச் ஸ்டேசனில் கூட்ட நெரிசல் குறைந்து, சமூக விலகலுடன் பயணம் எளிதாக உள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக