Nigazhvu News
23 Nov 2024 8:04 AM IST

Breaking News

கோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசிலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

Copied!
Nigazhvu News

கோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசிலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

கோபா அமெரிக்கா கால்பந்தில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. பிரேசிலில் நடைபெற்று 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரேசிலை வீழ்த்தி கோப்பையை வென்றது அர்ஜெண்டினா.

பிரேசிலில் கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பை போட்டிகள் நடந்து வருகிறது. பிரேசிலும், அர்ஜெண்டினாவும் அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிபோட்டி, இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பிரேசிலில் உள்ள மரக்காணா மைதானத்தில் நடைபெற்றது. 

கொரோனா தொற்றுக் காரணமாக இரசிகர்கள் இன்றி போட்டி நடந்தாலும், சொந்த மண்ணில் ஆடியதால் ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆக்ரோஷம் காட்டியது பிரேசில். நட்சத்திர வீரர்களான பிரேசிலின் நெய்மர் மற்றும் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி மோதுவதால், இப்போட்டி அதிக எதிர்பார்பை உண்டாக்கியது. 

இரு அணிகளும் சம பலத்துடன் மோதிய போட்டியில், ஆட்டத்தின் முதல் பாதியின் 27-வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா அட்டகாசமாக ஒரு கோல் அடித்தார். பிரேசில் தரப்பில் கோல் எதுவும் போடவில்லை. இதனால் அர்ஜென்டினா 1-0 என முன்னிலையில் முதல் பாதி ஆட்டத்தை முடித்தது.


தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் கோல் அடித்து சமன் செய்ய கடுமையாக முயற்சித்தார். ஆனால் அவரின் முயற்சியை அர்ஜெண்டினா தடுப்பாட்ட வீரர்கள் அதனை முறியடித்தனர். கூடுதலாக அளிக்கப்பட்ட 4 நிமிடத்திலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 

இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி வாகை சூடியது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோபா அமெரிக்க கால்பந்து கோப்பையை அர்ஜெண்டினா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


அர்ஜெண்டினா அணி 15வது முறை கோப்பையைக் கைப்பற்றினாலும், அந்த அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி, அர்ஜெண்டினாவுக்காக வெற்றி பெறும் முதல் சர்வதேச கோப்பை இதுவே ஆகும். 

இதனால் மெஸ்ஸி மற்றும் அர்ஜெண்டினா அணியின் ரசிகர்கள் இவ்வெற்றியைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

யூரோ கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி சாம்பியன்

நாற்பதில் கால்வைத்த தல தோனி : சமூக வலைதளத்தில் டிரெண்டான தோனி

Copied!
மித்ரன்

ஒலிம்பிக் ஹாக்கி: 41 ஆண்டுகளுக்குப்பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

மித்ரன்

ஒலிம்பிக் பேட்மிண்டன்: வெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து - சீன வீராங்கனையை வீழ்த்தி மூன்றாம் இடம்

மித்ரன்

யூரோ கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி சாம்பியன்

மித்ரன்

நாற்பதில் கால்வைத்த தல தோனி : சமூக வலைதளத்தில் டிரெண்டான தோனி