ஒலிம்பிக் பேட்மிண்டன்: வெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி. சிந்து - சீன வீராங்கனையை வீழ்த்தி மூன்றாம் இடம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஹி பிங்ஜியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பானின் டோக்கியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் அசத்திய இந்திய வீராங்கனை பி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். தங்கப் பதக்கத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகின் நம்பர்1 வீராங்கனையான தைவானைச் சேர்ந்த Tai Tzu-Ying-யிடம் நேர்செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
அரையிறுதியில் தோல்வியடைந்ததால், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீனாவின் ஜியாவோ பிங்கை இன்று எதிர்கொண்டார்.
பரபரப்புடன் தொடங்கிய இந்த ஆட்டத்தில், சிறப்பாக விளையாடிய சிந்து 21-13 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார். இதனால் எளிதில் சிந்து வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், பிராவோ இரண்டாவது சுற்றில் கடுமையாக எதிர்கொண்டார்.
ஒருகட்டத்தில் 11-11 என்ற சமநிலையை அடைய ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அந்த சூழ்நிலையை சிறப்பாக எதிர்கொண்ட சிந்து 18-14 என்று வெற்றியை நெருங்கினார். கடைசியில் சூப்பர் 'ஸ்மாஷ்' அடித்த சிந்து, இரண்டாவது செட்டைக் கைப்பற்றியதோடு, போட்டியை வென்று வெண்கலப் பதக்கத்தை சொந்தமாக்கினார்.
இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பி.வி. சிந்து அடைந்துள்ளார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டோக்கியா ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் இரண்டாவது பதக்கம் இதுவாகும். பளுதூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார்.
உங்கள் கருத்தை பதிவிடுக