Nigazhvu News
23 Nov 2024 8:32 AM IST

Breaking News

யூரோ கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி சாம்பியன்

Copied!
Nigazhvu News
யூரோ கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி சாம்பியன்
யூரோ கால்பந்து கோப்பைத் தொடரின்  இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை,  பெனால்டி சூட் அவுட் முறையில் வீழ்த்தி  இத்தாலி அணி சாம்பியன் பட்டம் வென்றது

இங்கிலாந்தில் யூரோ கால்பந்து கோப்பைத் தொடர் கடந்த சில வாரங்களாக  நடைபெற்று வந்தது. அதன் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள வெம்பிலியில்  இன்று அதிகாலை நடைபெற்றது. அதன் இறுதிப்போட்டியில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்தின. 

பரபரப்பாகத் தொடங்கிய இப்போட்டியின் இரண்டாவது நிமிடத்தில்  இங்கிலாந்தின்  லுக் ஷா கோல் அடித்து அசத்தினார். இங்கிலாந்தின் ஹாரிகேன் அனுப்பிய பந்தை கெய்ரன் டிரிப்பியர் அட்டகாசமாய் உதைத்து அனுப்பிய பந்து,  காற்றில் வளைந்து இறங்கியது. அதைத் துல்லியமாக வலைக்குள் அனுப்பி லுக் ஷா கோலாக்க, வெம்பிலி அரங்கமே அதிர்ந்தது..   

அனல் பறக்க ஆடிய இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயன்றதால் ஆட்டம் விருவிருப்பாக இருந்தது. இத்தாலி வீரர் பிரெடெரிகோ  சீசா துல்லியமாக அடித்ததைத்  இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்போர்டு தடுக்க இத்தாலி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இங்கிலாந்தின் தடுப்பாட்டம் சிறப்பாக இருந்ததாலும் இத்தாலி வீரர்கள் தொடர்ந்து கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் ஆட்டத்தின் பாதி வரை இரு அணிகளும் வேறு ஏதும் போடததால் முதல் பாதி ஆட்டத்தில்  முன்னிலை பெற்றது.



தொடர்ந்து நடைபெற்ற  இரண்டாவது பாதியில், ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் ஆண்ட்ரியா பெலோட்டியின் தலையால் முட்டித் தள்ளினார். அதைப் பிக்போர்டு அழகாக கோல் போஸ்ட்டிற்கு கடத்த, கோலாக மாற்றனார் போனுக்கி. இந்த கோலின் மூலம் ஸ்கோரை சமன் செய்தது இத்தாலி.

இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில்  தலா ஒரு கோல் அடித்திருந்தன. அதனால் போட்டியில் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டிக் ஷுட் அவுட் முறை நடத்தப்பட்டது. அதில் இதில் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி வென்றது. 



இத்தாலி அணி கடைசியாக 1966ல் யூரோ கோப்பையை வென்றது. அதன் பிறகு 55 ஆண்டுகள் கழித்து மீண்டும் யூரோ கோப்பையை வென்றுள்ளது. இங்கிலாந்து இறுதிப் போட்டி வரை வந்து தோற்றதால், அந்நாட்டு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இறுதி போட்டி வரை வந்து, பெனால்டி ஷுட் அவுட்டில் இங்கிலாந்து தோல்வியடைந்ததால் இங்கிலாந்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

 போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு யூரோ  கால்பந்து தொடரின் கோல்டன் பூட் விருது வழங்கப்பட்டது.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஒலிம்பிக் பேட்மிண்டன்: வெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து - சீன வீராங்கனையை வீழ்த்தி மூன்றாம் இடம்

கோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசிலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

Copied!
மித்ரன்

ஒலிம்பிக் ஹாக்கி: 41 ஆண்டுகளுக்குப்பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

மித்ரன்

ஒலிம்பிக் பேட்மிண்டன்: வெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து - சீன வீராங்கனையை வீழ்த்தி மூன்றாம் இடம்

மித்ரன்

கோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசிலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

மித்ரன்

நாற்பதில் கால்வைத்த தல தோனி : சமூக வலைதளத்தில் டிரெண்டான தோனி