Nigazhvu News
23 Nov 2024 4:16 AM IST

Breaking News

மும்பை டெஸ்ட்: மாயங்க் அகர்வால் சதத்தால் தப்பியது இந்தியா: கோலி,புஜாரா டக் - அஜாஸ் பட்டேல் 4 விக்கெட்

Copied!
Nigazhvu News

மும்பை டெஸ்ட்: மாயங்க் அகர்வால் சதத்தால் தப்பியது இந்தியா: கோலி,புஜாரா டக் - அஜாஸ் பட்டேல் 4 விக்கெட் 

நியூசிலாந்திற்கு எதிரான மும்பை டெஸ்ட் போட்டியில் மாயங்க் அகர்வால் சதமடிக்க, இக்கட்டான நிலையில் இருந்து தப்பிய இந்தியா,  முதல் ஆட்ட நேர முடிவில் 221-4 என்ற ஸ்கோரை எட்டியது‌. கோலி மற்றும் புஜாராவை ஒரே ஓவரில் டக் அவுட் ஆக்கிய அஜாஜ் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இந்திய-நியூசிலாந்து  அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மும்பையில் தொடங்கியது.நேற்று பெய்த மழையின் காரணமாக தாமதமாக 12 மணிக்கு துவங்கிய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் காயம் காரணமாக ரகானே, ஜடேஜா மற்றும் இஷாந்த் நீக்கப்பட்டு கோலி, ஜெயந்த் மற்றும் சிராஜ் இடம்பிடித்தனர். நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக கேப்டன் வில்லியம்சனுக்கு பதிலாக டேரல் மிச்செல் களமிறங்கினார். டாம் லேதம் கேப்டனாகப் பொறுப்பேற்றார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் மாயங்க் அகர்வால் இருவரும் சிறப்பாக ஆடி நீண்ட இடைவேளைக்குப் பிறகு, முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் சேர்த்தனர். ஸ்கோர் 80 ஆக இருந்த போது, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சுப்மன் கில் 44 ரன்களில் அஜாஜ் பட்டேல் பந்தில் ஸ்லிப் திசையில் நின்ற  ரோஸ்டெய்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்

அடுத்து வந்த புஜாராவை அடுத்த ஓவரில் போல்டாக்கி  வெளியேற்றிய அஜாஜ் பட்டேல், கேப்டன் கோலியையும் அதே ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் டக் அவுட்டாக்க இந்தியா 80-0 என்ற நிலையில் இருந்து 80-3 என்ற பரிதாப நிலையை எட்டியது. அம்யர்களின் தவறான முடிவால் கோலி அவுட் ஆனதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் மற்றும் அகர்வால் ஜோடி தத்தளித்த இந்தியாவை கரையேற்றும் முயற்சியில் ஈடுபட்டது‌. பொறுப்பாக ஆடிக்கொண்டிருந்த அக்ர்வால் அதிரடிக்கு மாறி பவுண்டரிகளை விளாசினார். அவர் அரைசதம் அடித்தநிலையில் ஸ்கோர் 160க்கு உயர்ந்த போது ஸ்ரேயாஸ் ஐயர் துரதிஷ்டவசமாக அஜாஜ் பட்டேல் பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற மீண்டும் இந்திய அணி தடுமாற்றமான நிலைக்கு சென்றது. 

அதன் பின் ஜோடி சேர்ந்த சாகா- மாயங்க் அகர்வால் ஜோடி பொறுப்பாக விளையாடி மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் பார்த்துக் கொண்டதோடு, ரன்களையும் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய மாயங்க் அகர்வால் தனது 4வது சதத்தை பூர்த்தி செய்தார். 

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. மாயங்க் அகர்வால் 120 ரன்களுடன், சாகா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று விழுந்த 4 விக்கெட்டுகளையும் அஜாஜ் பட்டேல் ஒருவரே வீழ்த்தினார். 

சுருக்கமான ஸ்கோர்: இந்தியா முதல் இன்னிங்ஸ் 221-4 (மாயங்க் 120* , கில் 44, அஜாஜ் 4-73)



உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

பிரேசில் கால்பந்து தொடர்: இந்திய அணிக்காக களமிறங்கிய 18 வயது தமிழக வீராங்கனை மாரியம்மாள் - பிரேசிலுக்கு எதிராக கோலடித்து அசத்திய மனீஷா

Copied!
மித்ரன்

ஒலிம்பிக் பேட்மிண்டன்: வெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து - சீன வீராங்கனையை வீழ்த்தி மூன்றாம் இடம்

மித்ரன்

யூரோ கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி சாம்பியன்

மித்ரன்

கோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசிலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

மித்ரன்

நாற்பதில் கால்வைத்த தல தோனி : சமூக வலைதளத்தில் டிரெண்டான தோனி