ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா : தடகளப் பிரிவில் முதல் தங்கம் வென்று சாதனை
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலுக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. தகுதிச் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு முதல் முயற்சியிலேயே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் நீரஜ் சோப்ரா. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இன்று நடந்த இறுதிச் சுற்றுப் போட்டியில் அசத்திய இ நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தை வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்
நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்காக தடகளப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அதோபோல் தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஆவார். 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீரஜ் சோப்ரா வென்ற தங்கப் பதக்கத்தின் மூலம் இந்தியா, 66வது இடத்தில் இருந்து 47வது இடத்துக்கு முன்னேறியது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தமாக 7 பதக்கங்களை வென்றது.
உங்கள் கருத்தை பதிவிடுக