Nigazhvu News
12 Apr 2025 3:50 AM IST

ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்தியா ஹாக்கி அணி

Copied!
Nigazhvu News

ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்தியா ஹாக்கி அணி 

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில், ஜெர்மனியை வெண்கலம் வென்றுள்ளது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். 

லீக் சுற்றுகளில்  அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி  காலிறுதியில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. அரையிறுதியில் பெல்ஜியம் அணியிடம் போராடி தோற்ற இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இதனால் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனிக்கெதிராக ஆடியது.

இரு அணிகளுமே பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய தால், போட்டியில் அனல் பறந்தது.‌ போட்டியின் துவக்கத்திலேயே கோல் அடித்து அதிர்ச்சி அளித்தது ஜெர்மனி. அதைச் சமன் செய்ய இந்திய கடுமையாகப் போராடியது. ஒருவழியாக சிம்ரான் ஜித் முதல் கோல் அடித்து  1-1 என ஸ்கோரை சமன் செய்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்த ஜெர்மனி ஆட்டத்தின்  22 மற்றும் 24ஆவது நிமிடத்தில் ஜெர்மனி, அபாராமாக  இரண்டு கோல் அடிக்க இந்தியாவின் பதக்கக் கனவு கேள்விக்குறியானது.

இதனால் ஆக்ரோஷமாக ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய அணி.. இந்தியாவின் ஹர்மன் பிரீத்  அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து போட்டி 3-3 என சமநிலையை எட்டியது.

ஆட்டத்தின்  அ31 மற்றும் 34ஆவது நிமிடத்தில்  இந்தியாவின்  சிம்ரான் ஜித், ருபிண்டர் சிங் தலா ஒரு  கோல் அடிக்க   5-3 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.  

அடுத்து ஜெர்மனியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இறுதியில்  5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது. 

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் இந்தியா ஹாக்கி அணி,  முதல்முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து பலரும் இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

 




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா : தடகளப் பிரிவில் முதல் தங்கம் வென்று சாதனை

ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்து இந்தியா வரலாற்று சாதனை

Copied!
மித்ரன்

ஒலிம்பிக் பேட்மிண்டன்: வெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து - சீன வீராங்கனையை வீழ்த்தி மூன்றாம் இடம்

மித்ரன்

யூரோ கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி சாம்பியன்

மித்ரன்

கோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசிலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

மித்ரன்

நாற்பதில் கால்வைத்த தல தோனி : சமூக வலைதளத்தில் டிரெண்டான தோனி