Nigazhvu News
28 Sep 2024 11:44 PM IST

Breaking News

பள்ளிக்கரணையில் சுற்றுச்சூழல் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Copied!
Nigazhvu News

20 கோடி செலவில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 2.5 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். ராம்சார் உடன்படிக்கையின் கீழ் சதுப்பு நிலத்தை சதுப்பு நிலமாக அறிவிக்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரை  அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த பூங்காவில் பறவைகளைக் காண வரும் பார்வையாளரகளின் வசதிக்காகவும், நடப்பவர்களின் நலனுக்காக 2-கிமீ பாதசாரி பாதை அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சதுப்பு நிலமாக அறிவிக்கக்கோரி மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

பூங்காவில் 5,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை விளக்கும் பலகைகள் பார்வையாளர்களின் நலனுக்காக வைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வரும் பறவையினங்களை பாதுகாக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பறவைகள் சரணாலயமாக அறிவிக்கும் முயற்சி நடந்து வருகிறது.

இந்த நிகழ்வில் வனத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவா.வி.மெய்யநாதன், தலைமைச் செயலர் வி.இறை அன்பு, வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு,முதன்மை தலைமை வன பாதுகாவலர் அசோக் உப்ரீதி, முதன்மை தலைமை வன பாதுகாவலர் சேகர் குமார் நிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

விடுமுறை வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, நகர காவல்துறையினருக்காக தொடங்கப்பட்ட TN Police CLAPP விடுமுறை மொபைல் செயலி

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணி கைது

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!