Nigazhvu News
17 Mar 2026 3:22 AM IST

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணி கைது

Copied!
Nigazhvu News

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணி கைது 

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலைமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியிடம் உதவியாளராக இருந்து வருகிறார். இந்த காலகட்டத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் அரசு வேலைவாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. 

இந்நிலையில், போக்குவரத்து துறையில் உதவிப் பணியாளர் வேலையைப் பெற்றுத்தர ரூ.17  லட்சம் பணத்தைப் பெற்று ஏமாற்றியதாக, கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த  தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார் 

 இதனை ஏற்று,  120-பி மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இடைத்தரகர் செல்வக்குமார் மற்றும் மணியை கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். 

மேலும் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ 50 லட்சம் முதல் 1.5 கோடி வரை மோசடி செய்துள்ளதாகத் தெரிகிறது. முன்னாள் முதல்வரின் உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

பள்ளிக்கரணையில் சுற்றுச்சூழல் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆடு திருடர்களை துரத்திய உதவி ஆய்வாளர் படுகொலை - திருச்சியில் பயங்கரம்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்