Nigazhvu News
28 Sep 2024 10:18 PM IST

Breaking News

தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2022

Copied!
Nigazhvu News

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக உள்ளாட்சி தேர்தலை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பிப்ரவரி 19 அன்று தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. 

இந்த தேர்தல் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என உள்ளாட்சிகளுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்டது. 

ஒரு லட்சத்து அறுபதாயிரம் மிண்ணனு வாக்கு இயந்திரங்கள், 31,150 வாக்குச்சாவடிகளில் இந்த தேர்தலுக்காகப் பயன்படுத்தப்பட்டன. இதில் 60.7 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. தர்மபுரி மாவட்டத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவும் (80.49%), குறைந்தபட்ச வாக்குப்பதிவு (43.59%) சென்னையிலும் பதிவானது. கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பாதுகாப்பாக, எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் நடந்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும் அதில் பயன்படுத்தப்பட்ட மிண்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு, துப்பாக்கி ஏந்திய மூன்று அடுக்கு போலீஸ் போடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில் நேற்று காலை 8 மணி முதல் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டது. இதில் பெருவாரியான இடங்களில் ஆளும் திமுக கூட்டணி வென்றுள்ளது. 21 மாநாகராட்சிகளையும் கைப்பற்றிய திமுக, 90 சதவீதம் பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. மா

நாகராட்சி தேர்தல் முடிவுகள்: 

21 மாநகராட்சிகளில் 1372 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், திமுக 952 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது.

அதிமுக 164 இடங்களையும், காங்கிரஸ் 73 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் 24 இடங்களையும் கைப்பற்றியது‌. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக 20, விசிக 14, சிபிஐ 12 இடங்களையும் வென்றுள்ளது. 

தனித்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அமமுக 2 இடங்களிலும், சுயேட்சைகள் 65 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகள் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாததோடு, பல இடங்களில் டெபாசிட் இழந்தும், ஒற்றை இலக்கங்களிலும் வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

200 வார்டுகள் கொண்ட சென்னை மாநகராட்சியில் திமுக 178 இடங்களை வென்றுள்ளது. 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. 

நகராட்சி முடிகள் : 

3842 நகராட்சி இடங்களுக்கு நடந்த தேர்தலில், திமுக 2360 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 151, மதிமுக 34, விசிக 26, சிபிஐ 19, சிபிஎம் 41, ஐயூஎம்எல் 23 இடங்களையும் கைப்பற்றியது. 

அதிமுக 638 இடங்களில் வென்றுள்ளது. தனித்து போட்டியிட்ட பா.ம.க 48 இடங்களிலும், பா.ஜ.கா 56 இடங்களிலும், அமமுக 33 இடங்களிலும், தேமுதிக 12 இடங்களிலும் வெற்றி பெற்றன. 

மாயாவதியின் பகுஜன் சமாஜ் 3 இடங்களைக் கைப்பற்றி ஆச்சர்யம் அளித்தது. 381 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகளால் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. 

பேரூராட்சி தேர்தல் முடிவுகள்: 

7603 இடங்களுக்கான பேரூராட்சி தேர்தலில், திமுக 4388 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதிமுக 1206 இடங்களில் வென்றுள்ளது. 

திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் 586, மதிமுக 88, விசிக 91, சிபிஎம் 165, சிபிஐ 57 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

தனித்து போட்டியிட்ட பாஜக 312 இடங்களிலும், பாமகா 121 இடங்களிலும், அமமுக 101 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தேமுதிக 35 இடங்களிலும், நாம் தமிழர் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், சுயேட்சைகள் 1457 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் : 

மொத்தமாக12848 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 7700 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 2063 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 592 இடங்களிலும், பா.ஜ.கா 308 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

நாம் தமிழர் கட்சி 6 பேரூராட்சி இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் நீதி மையம் உள்ளாட்சி தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், மாநாகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துணை தலைவர் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக உள்ளாட்சி தேர்தலை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பிப்ரவரி 19 அன்று தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. 

இந்த தேர்தல் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என உள்ளாட்சிகளுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்டது. 

ஒரு லட்சத்து அறுபதாயிரம் மிண்ணனு வாக்கு இயந்திரங்கள், 31,150 வாக்குச்சாவடிகளில் இந்த தேர்தலுக்காகப் பயன்படுத்தப்பட்டன. இதில் 60.7 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. தர்மபுரி மாவட்டத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவும் (80.49%), குறைந்தபட்ச வாக்குப்பதிவு (43.59%) சென்னையிலும் பதிவானது. கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பாதுகாப்பாக, எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் நடந்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும் அதில் பயன்படுத்தப்பட்ட மிண்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு, துப்பாக்கி ஏந்திய மூன்று அடுக்கு போலீஸ் போடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில் நேற்று காலை 8 மணி முதல் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டது. இதில் பெருவாரியான இடங்களில் ஆளும் திமுக கூட்டணி வென்றுள்ளது. 21 மாநாகராட்சிகளையும் கைப்பற்றிய திமுக, 90 சதவீதம் பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. 

மாநாகராட்சி தேர்தல் முடிவுகள்: 

21 மாநகராட்சிகளில் 1372 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், திமுக 952 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது.

 அதிமுக 164 இடங்களையும், காங்கிரஸ் 73 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் 24 இடங்களையும் கைப்பற்றியது‌. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக 20, விசிக 14, சிபிஐ 12 இடங்களையும் வென்றுள்ளது. 

தனித்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அமமுக 2 இடங்களிலும், சுயேட்சைகள் 65 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகள் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாததோடு, பல இடங்களில் டெபாசிட் இழந்தும், ஒற்றை இலக்கங்களிலும் வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

200 வார்டுகள் கொண்ட சென்னை மாநகராட்சியில் திமுக 178 இடங்களை வென்றுள்ளது. 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. 

நகராட்சி முடிகள் : 

3842 நகராட்சி இடங்களுக்கு நடந்த தேர்தலில், திமுக 2360 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 151, மதிமுக 34, விசிக 26, சிபிஐ 19, சிபிஎம் 41, ஐயூஎம்எல் 23 இடங்களையும் கைப்பற்றியது. 

அதிமுக 638 இடங்களில் வென்றுள்ளது. தனித்து போட்டியிட்ட பா.ம.க 48 இடங்களிலும், பா.ஜ.கா 56 இடங்களிலும், அமமுக 33 இடங்களிலும், தேமுதிக 12 இடங்களிலும் வெற்றி பெற்றன. 

மாயாவதியின் பகுஜன் சமாஜ் 3 இடங்களைக் கைப்பற்றி ஆச்சர்யம் அளித்தது. 381 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகளால் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. 

பேரூராட்சி தேர்தல் முடிவுகள்: 

7603 இடங்களுக்கான பேரூராட்சி தேர்தலில், திமுக 4388 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதிமுக 1206 இடங்களில் வென்றுள்ளது. 

திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் 586, மதிமுக 88, விசிக 91, சிபிஎம் 165, சிபிஐ 57 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

தனித்து போட்டியிட்ட பாஜக 312 இடங்களிலும், பாமகா 121 இடங்களிலும், அமமுக 101 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தேமுதிக 35 இடங்களிலும், நாம் தமிழர் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், சுயேட்சைகள் 1457 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் : 

மொத்தமாக12848 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 7700 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 2063 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 592 இடங்களிலும், பா.ஜ.கா 308 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

நாம் தமிழர் கட்சி 6 பேரூராட்சி இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் நீதி மையம் உள்ளாட்சி தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர் ஆகியோரை மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க உள்ளனர். இதற்கான தேர்தல் வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

வீ.க.ப.க.தலைவருடன் ஆதனூர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை நிர்வாகிகள் சந்திப்பு

விடுமுறை வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, நகர காவல்துறையினருக்காக தொடங்கப்பட்ட TN Police CLAPP விடுமுறை மொபைல் செயலி

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!