தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூரில் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து புதியம்புத்தூரில் இருந்து ஓட்டப்பிடாரம் செல்லும் வழியில் சாலை விபத்தில் அடிபட்டுக் கிடந்த ஜம்புலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்குமார்(23), மணியாச்சியைச் சேர்ந்த முத்துசேகர் (28) இளைஞர்களைக் கண்டதும், தனது காரை விட்டு இறங்கிய கனிமொழி உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு, அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அப்போது சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.





உங்கள் கருத்தை பதிவிடுக