Nigazhvu News
17 Mar 2026 3:16 AM IST

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள்

Copied!
Nigazhvu News

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் தற்பொழுது வட்டார அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் நாசரேத் மர்காஷிஸ்  மேல்நிலைப்பள்ளியில்  நடைபெற்றது. பள்ளியின் உதவி தலைமையாசிரியை சாரா ஞானபாய் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் ஆகியோர் போட்டியினை துவக்கி வைத்தனர்.


உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர் முன்னிலை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். 11 வயது,14 வயது, 17 வயது மற்றும் 19  வயது என நான்கு பிரிவுகளில் மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் போட்டிகள் நடைபெற்றன.துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என மொத்தமாக 37 பள்ளிகளைச் சார்ந்த 105 மாணவர்கள், மாணவிகள் போட்டிகளில் பங்கறனர். சதுரங்க பயிற்சியாளர்  விஜயகுமார் தலைமை நடுவராகப் பணியாற்றினார். புஷ்பா இவாஞ்சலின் துணை நடுவராகப் பணியாற்றினார்.ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர் தனபால் நன்றி கூறினார்.


போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் சுதாகர் வழிகாட்டுதலின்படி, தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமையில், உடற்கல்வி ஆசிரியர் சுஜித் செல்வ சுந்தர், ஆங்கில ஆசிரியர் ஸ்டீபன், பிற ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

சாலை விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்களுக்கு, ஓடி வந்து உதவிய கனிமொழி கருணாநிதி எம்.பி

இடைச்சிவிளை பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடை அளிப்பு.

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்