Nigazhvu News
18 Mar 2026 2:28 PM IST

சாத்தான்குளம் ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி 26 பேர்கள் ஸ்டிரைக்

Copied!
Nigazhvu News

சாத்தான்குளம்   ஊராட்சி ஒன்றியத்தில்  20 அம்ச  கோரிக்கையை வலியுறுத்தி ஊரக  வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர்  25  பேர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 


தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும், கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும், வளர்ச்சித் துறை ஊழியர் மீது திணிக்கப்படும் பிறதுறை பணிகளை முற்றாக கைவிட வேண்டும் தமிழக முதல்வர் அளித்துள்ள வாக்குறுதிகளில் ஒன்றான கடந்த கால வேலை நிறுத்த நாட்களை வரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உட்பட  20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய 2 நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இந்த போராட்டம்  தொடங்கியது. அதன்படி சாத்தான்குளம்   ஊராட்சி ஒன்றியத்தில்   பணிபுரியும் 42 பேர்களில்  2வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட 26பேர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டுனள்ளர். இந்த போராட்டம்  வெள்ளிக்கிழமையும்  (23ஆம்தேதி) தொடர்கிறது.  இதன் காரணமாக சாத்தான்குளம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  ஊரக வளர்ச்சித்துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுமக்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

சேதமடைந்த சுப்பராயபுரம் தரைமட்ட பாலம் படம் 2., சடையனேரி கால்வாயில் பழுதடைந்துள்ள உபரி நீர் ஷட்டர்

வட்டார அளவிலான பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி. சாத்தான்குளம் பள்ளி அணி முதலிடம்.

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்