சாத்தான்குளம்
கடந்த மழை வெள்ளத்தில் சேதமான சுப்பராயபுரம் தாம்போதி பாலத்தை பருவ மழை தொடங்கும் முன்பு சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரத்திலிருந்து பன்னம்பாறை செல்லும் ரோட்டில் கருமேனியாறு செல்லும் தரைமட்ட பாலம் உள்ளது .இந்த பாலம் கடந்த ஆண்டு பெய்த அதி கன மழையில் சேதம் அடைந்தது. மேலும் இந்த வழியாகத்தான் சடையனேரி கால்வாய் தண்ணீர் புத்தன்தருவைக்கு செல்கிறது .இந்த ரோட்டில் முதலூர் , பொத்தக்காலன்விளை,போலையர்புரம் பகுதியில் உள்ளவர்கள் பன்னம்பாறை ,மெஞ்ஞானபுரம் செல்வதற்கு நேர்வழிப் பாதையாக உள்ளது. தரைமட்ட பாலம் சேதமடைந்ததால் மழைக்காலத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பருவ மழை தொடங்கும் முன்பு சுப்பராயபுரம் தரைமட்ட பாலத்தை சீர் செய்ய வேண்டும் என முதலூர் சமூக ஆர்வலர்கள் விவசாயி அல்பர்ட், ஆசிரியர் ராஜசிங் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அதே பகுதியில் உள்ள சடையனேரி கால்வாய் உபரி நீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட ஷட்டர் பழுதடைந்துள் TVளது.இதனால் சடையனேரி கால்வாயில் சிறிதளவே தண்ணீர் வந்தால் கருமேனி ஆற்றில் கலந்து விடும்.இதனால் முதலூர் ஊரணி, வைரவம் தருவை,புத்தன்தருவை குளங்களுக்கு தண்ணீர் செல்லாது.எனவே பொதுப்பணித்துறையினர் மழைக்காலம் தொடங்கும் முன்பு அந்த ஷட்டரையும் சீர்செய்ய வேண்டும் என கூறினர்.


உங்கள் கருத்தை பதிவிடுக