Nigazhvu News
17 Mar 2026 3:16 AM IST

கோவில்பட்டி பள்ளியில் தேசிய விண்வெளி தின விழா

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப்,கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கோவில்பட்டி புதுரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேசிய விண்வெளி தின விழா நடந்தது.


சந்திராயன்-3 செயற்கைக்கோள் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி செயல்பட துவங்கிய நாளான ஆகஸ்ட் 23ம் தேதியை பாரத பிரதமர் தேசிய விண்வெளி தினமாக கொண்டாட அறிவித்தார்.இந்தாண்டு முதல்ஆகஸ்ட் 23ம் தேதி விண்வெளி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.


கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் தலைமை வகித்தார்.

ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார்.

பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பாராயன் அனைவரையும் வரவேற்றார்.




கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் தாமோதர கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய விண்வெளி தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும். கோள்கள் குறித்த விழிப்புணர்வு அட்டைகளையும் வழங்கி பேசினார்.

மாணவர்களுக்கு டெலஸ்கோப் மூலம் தொலைதூர பொருட்களை பார்வையிட பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் பள்ளி ஆசிரியர்கள் கண்ணன், பொற்ச்செல்வி,பொன்மலர்பாரதி உள்பட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் ஆசிரியை மீனா நன்றி கூறினார்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குசாலை கீதாஜீவன் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது

சேதமடைந்த சுப்பராயபுரம் தரைமட்ட பாலம் படம் 2., சடையனேரி கால்வாயில் பழுதடைந்துள்ள உபரி நீர் ஷட்டர்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்