ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குசாலை கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மகிழ் சந்தோஷ் தலைமையில் இன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. அப்போது 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் இளங்குமரன், கோவில்பட்டி ரத்த வங்கி சிறப்பு மருத்துவ அலுவலர் ஸ்ரீவெங்கடேஷ், கோவில்பட்டி சுகாதார நல கல்வியாளர் முத்துசாமி ,கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் முருகராஜ், சுகாதார ஆய்வாளர் தேவசுந்தரம் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக