வட்டார அளவிலான பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டிகளில் சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆர்.எம்.பி. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணி முதலிடம் பிடித்தனர்.
பள்ளி கல்வி துறை சார்பில் உடன்குடி,சாத்தான்குளம் ஒன்றியம் இணைந்த வட்டார அளவிலான 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான வாலிபால் விளையாட்டு போட்டிகள் சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சாத்தான்குளம், உடன்குடி பள்ளி மாணவ அணியினர் கலந்து கொண்டனர். இப் போட்டியில் சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆர்.எம்பி புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று முதல் இடத்தை பெற்றனர். இதன்மூலம் தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
போட்டியில் வென்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், வசந்த்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் டேவிட்வேதராஜ், தலைமை ஆசிரியர் செல்லப்பாண்டியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
உங்கள் கருத்தை பதிவிடுக