புத்தன்தருவையில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சாத்தான்குளம் ஒன்றியம் புத்தன்தருவை ஊரராட்சி பகுதியில் தெருநாய்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கூட்டமாக வருவதுடன் ஆடுகளை கடிப்பதுடன் குழந்தைகள் துரத்துகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் துரத்துகிறது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் நிலையும் தொடர்கிறது. ஆதலால் ஊராட்சி நிர்வாகம் இதனை கவனித்து தெருநாய்கள் கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக