Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வார சந்தை அருகே துர்நாற்றம் வீசும் கால்வாய்... அலட்சியமாக செயல்படும் பேரூராட்சி நிர்வாகம்...

Copied!
Nigazhvu News

உரிய நடவடிக்கை எடுத்து கால்வாய் சுத்தப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை...

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேருந்து நிலையம் அருகில் சுமார் 70 ஆண்டுகளாக ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 

சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த வார சந்தையில் வந்து வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். 

குறிப்பாக மாலை நேரத்தில் அதிக அளவில் பொதுமக்கள் காய்கறி மற்றும் பொருட்களை வாங்க குவிந்து வருகின்றனர். 

இந்த நிலையில் சாத்தான்குளம் வார சந்தை அருகே மழைநீர் வடிகால் கால்வாய் உள்ளது. மழைக்காலங்களில் இந்த வழியாக மழைநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

தற்போது இந்த ஓடை சாக்கடை கால்வாயாக மாறி வருகிறது.பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள்,கழிவு நீர் என அனைத்தும் இந்த கால்வாயில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. 

மேலும் நோய் பரப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 




சாத்தான்குளத்தில் செயல்பட்டு வரும் பேரூராட்சி நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

எனவே உடனடியாக இந்த ஓடையை சீரமைத்து பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

புத்தன்தருவையில் தெரு நாய்கள் தொல்லை .

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி தொடங்கிய நிலையில் அருகில் உள்ள ஆர்சி வடக்கு தெரு மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை அடைத்ததாக கூறி அப்பகுதி மக்கள் திடீரென திரண்டதால் பரபரப்பு...

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்