Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி தொடங்கிய நிலையில் அருகில் உள்ள ஆர்சி வடக்கு தெரு மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை அடைத்ததாக கூறி அப்பகுதி மக்கள் திடீரென திரண்டதால் பரபரப்பு...

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கே டி கோசல்ராம் பேருந்து நிலையம் பழுதடைந்த காரணத்தினால் அது முழுவதுமாக இடிக்கப்பட்டு தற்போது  சுமார் ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அருகில் உள்ள ஆர்சி வடக்கு தெரு பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கு செல்வதற்கான பாதையை அடைத்ததாக கூறி அப்பகுதியில் திரண்டு அதிகாரிகளிடம் கட்டுமான பணியை நிறுத்துமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பேருந்து நிலையம் கட்டுவதற்கான வரைபடம் எங்கே இருக்கிறது? அதில் எங்கள் பகுதிக்கு செல்வதற்கான பாதை இருக்கிறதா இல்லையா என்று பொறியாளரிடம் கேள்வி எழுப்பினர். 

முறையான வரைபடத்தை காண்பித்து பாதை உள்ளது என்று தெரிந்த பின்னர் கட்டுமான வேலையை செய்யுங்கள். அதுவரை வேலை செய்ய விட மாட்டோம் என்று சுமார் 50க்கும் மேற்பட்டோர்  அப்பகுதியில் திரண்டனர்.

அதன் பின்னர் அதிகாரிகள் தரப்பில் நாளை இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பின்பு முடிவு செய்யலாம் என்று கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வார சந்தை அருகே துர்நாற்றம் வீசும் கால்வாய்... அலட்சியமாக செயல்படும் பேரூராட்சி நிர்வாகம்...

ஓட்டப்பிடாரம் அருகே S.கைலாசபுரத்தில் கூட்டு குடிநீர் திட்ட பைப் லைன் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி சிதைந்த சாலை - நடவடிக்கை எடுக்காத குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்; மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்