ஓட்டப்பிடாரம் அருகே S.கைலாசபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தார் சாலையின் அடிப்பகுதி வழியாக வல்லநாட்டிலிருந்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, காரியாபட்டி உள்ளிட்ட நகரங்களுக்கு கூட்டு குடிநீர் திட்ட மூலம் தண்ணீர் செல்லும் பைப் லைன் செல்கிறது.

இந்த மெயின் பைப் லைனில் மூன்று இடங்களில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக உடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. மேலும் இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் புதிதாக போடப்பட்ட தார் சாலை ஆனது சிதைந்து ககாணப்படுகிறது.

மேலும் சாலையின் அருகில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் அருகிலும் நீர் கசிந்து பசலி அடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து S.கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருவடி என்பவர் எங்களது கிராமம் வழியாக செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைனில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உடனடியாக உடைப்பு ஏற்பட்ட பைப் லைனை சரி செய்து சிதைந்த தார்சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவிடுக