Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

வாஞ்சி மணியாச்சி ரயில்வே நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லாவிட்டால் செப்டம்பர் 6 ல் போராட்டம்

Copied!
Nigazhvu News

ஒட்டப்பிடாரம் அருகே வாஞ்சி மணியாச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை ஓட்டப்பிடாரம் அதன் சுற்றுவட்டார  கிராமங்களை சேர்ந்த சுமார் 70 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவி மாணவிகள் பயன்படுத்தி வந்தனர். மேலும் வாஞ்சி மணியாச்சி ஜங்ஷன் வழியாக பெரும்பாலான ரயில்கள் வாஞ்சி மணியாச்சி ஜங்ஷனில் நின்று சென்ற நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு பெரும்பாலான ரயில்கள்  வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் நின்று சொல்வதில்லை. 

இதனால் சுமார் 70 கிராமங்களை சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். மேலும் இது குறித்து தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 இந்நிலையில் இன்று மதுரை கோட்ட மேலாளர் ஸ்ரீ வஷ்தவா வை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் சந்தித்து, தற்போது ரத்து செய்யப்பட்ட  

திருநெல்வேலி - தூத்துக்குடி- (06668-06667) திருநெல்வேலி பாசஞ்சர் ரயில்வே மீண்டும் இயக்க வேண்டும், 

வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்னர் நின்று சென்ற ரயில்கள் அனைத்தும் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  மனுவினை வழங்கினார். மேற்படி நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத பட்சத்தில் செப்டம்பர் 6 அன்று காலை 10 மணி அளவில் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் ஓட்டப்பிடாரம்  சட்டமன்ற  உறுப்பினர் சண்முகையா தலைமையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் சேர்ந்த பொதுமக்கள் முன்னிலையில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

வேம்பாரில், சட்ட விரோதமாக AIR COMPRESSOR-களை கொண்டு ஆழ்கடலில் கனவா மீன்கள் வேட்டை ; ஆபத்தை உணராமல் செய்யும் வேலைக்கு அதிகாரிகளும் உடந்தையா? ; மீன்வளத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை!

ஓட்டப்பிடாரம் அருகே நாகம்பட்டி கல்லூரியில் உணவு திருவிழா

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்