தூத்துக்குடி கோவில்பட்டி அருள்மிகு பூமிதேவி - நீலாதேவி சமேத அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்ற ராஜீவ் நகர் இ.பி.காலனியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி வேலம்மாள் தான் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயின், எட்டயபுரம் வளைவு ரோடு சுப்பிரமணியன் செட்டியார் காம்பவுண்டைச் சேர்ந்த ஜெகநாதன் மனைவி வேலம்மாள்(71) கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயின், அன்னை தெரசா நகரைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி ஆதிலட்சுமி(54) கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினும் காணவில்லை என கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து கோயில் மற்றும் கோயில் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் கோயில் விழாவில் எடுக்கப்பட்ட வீடியோக்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக