Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

கோவில்பட்டியில் சரக்கு வாகனம் மூலமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல் - 2 பேர் கைது

Copied!
Nigazhvu News

1 லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் - கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையம்  வழியாக  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்  கடத்தி கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்  ஸ்டீபன் ராஜ் தலைமையில்  தலைமைக் காவலர்  முத்து மாரி, முதல்நிலைக் காவலர்  ரமேஷ், காவலர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் அப்பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர் . அப்பகுதியில் சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த  சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் வாகனத்தில் தடைசெய்யப்பட்ட   புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.


இதையடுத்து 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும்  புகையிலை பொருட்களை கடத்தி வந்த சோழபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் மற்றும் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த யாகப்பராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 23 ஆயிர ரூபாய் ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணைகளை 35 பயனாளிகளுக்கு யூனியன் சேர்மன் ரமேஷ் வழங்கினார்

கோவில்பட்டி கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட 3 பெண்களிடம் 12 பவுன் நகை பறிப்பு - போலீசார் விசாரணை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்