Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு நோயாளி வசதிக்காக கிரைண்டர், சுடுதண்ணீராக்கும் இயந்திரம் அளிப்பு.

Copied!
Nigazhvu News

அரசு மருத்துவமனைக்கு  கிரைண்டர், சுடு தண்ணீராக்கும் இயந்திரத்தை தலைமை மருத்துவர்  பி. ஆத்திக்குமாரிடம் வழங்குகிறார்  ஐஎன்டியுசி காங்கிரஸ் மாநில செயலர் ஏ.லூர்துமணி..


சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு ஐஎன்டியுசி காங்கிரஸ் சார்பில் நோயாளிகளுக்கு தேவையான கிரைண்டர், சுடு தண்ணீராக்கும் இயந்திரம் மற்றும் தேவையான பொருள்களை ஐஎன்டியுசி காங்கிரஸ் மாநில செயலர் லூர்துமணி சனிக்கிழமை வழங்கினார். 


சாத்தான்குளம் அரசு மருத்துவமனை  வட்ட  தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு  நோயாளி வசதிக்காக தேவைபட்ட நிலையில்  அரசு மருத்துவமனைக்கு கிரைண்டர் மற்றும் சுடுதண்ணீராக்கும் இயந்திரம் தேவையான பொருள்கள் ஐஎன்டியுசி காங்கிரஸ் சார்பில்   சனிக்கிழமை  வழங்கப்பட்டது. இந்த பொருள்களை ஐஎன்டியுசி காங்கிரஸ் மாநிலச் செயலர்  ஏ.லூர்து மணி, மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர்  பி. ஆத்திக்குமாரிடம்   சனிக்கிழமை  வழங்கினார். அப்போது முதலூர் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வகுமார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலர் வர்க்கீஸ், சாத்தான்குளம் ஒன்றிய கவுன்சிலர் குருசாமி, தெற்கு வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர்கள் அண்னகணேசன், செல்வஜெகன், சேவா தள சாத்தான்குளம் நகர காங்கிரஸ் தலைவர் வண்ணமுத்து, நகர துணைத் தலைவர்  சுடலையாண்டி  ஆகியோர் உடன் இருந்தனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

கோவில்பட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசன போட்டி 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு - வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்!!

படுக்கப்பத்து பள்ளியில் நடந்த சாத்தான்குளம் வட்டார அளவிலான பள்ளி மாணவர்களுக்கான பூப்பந்தாட்ட போட்டிகளை ஊராட்சித் தலைவர் தனலட்சுமி சரவணன் தொடங்கி வைத்தார்.

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்