Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

படுக்கப்பத்து பள்ளியில் நடந்த சாத்தான்குளம் வட்டார அளவிலான பள்ளி மாணவர்களுக்கான பூப்பந்தாட்ட போட்டிகளை ஊராட்சித் தலைவர் தனலட்சுமி சரவணன் தொடங்கி வைத்தார்.

Copied!
Nigazhvu News

சாத்தான்குளம் வட்டார அளவிலான பூப்பந்தாட்ட போட்டிகள் படுக்கப்பத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் சாத்தான்குளம், உடன்குடி ஒன்றிய அளவிலான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியை படுக்கப்பத்து ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி சரவணன், எஸ். எம். சி தலைவர் சரவணன் ஆகியோர் துவங்கி வைத்தனர்.


பள்ளி தலைமை ஆசிரியை அமுதா முன்னிலை வகித்தார். போட்டியில் 17 வயது பிரிவில் மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், 14 வயது பிரிவில் உடன்குடி சல்மா மெட்ரிகுலேஷன் பள்ளியும் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். போட்டியில் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் ஐயன்கண்ணு, சத்யராஜ், ரவிக்குமார், ரிமல்சிங், பொன்சிங், குருநாதன் ஆகியோர் செயல்பட்டனர்.


வெற்றி பெற்ற அணியினருக்கும், போட்டியை சிறப்பாக நடத்தி தலைமை ஆசிரியை அமுதா, உடற்கல்வி ஆசிரியர் சைமன், நடுவராக பணிபுரிந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் எஸ்.எம்.சி தலைவர் பாராட்டு தெரிவித்தார்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு நோயாளி வசதிக்காக கிரைண்டர், சுடுதண்ணீராக்கும் இயந்திரம் அளிப்பு.

தென்திருப்பேரையில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்