முதலமைச்சரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் தென்திருப்பேரை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் "வருமுன் காப்போம்" திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தென்திருப்பேரை சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாமை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் ஆனந்த், சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.

முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தீபன் பேசுகையில், மருத்துவ முகாமின் நோக்கம் மற்றும் சுகாதார துறையில் மக்களுக்கான அரசு திட்டங்கள் குறித்து பேசினார்.
இச்சிறப்பு முகாமில் பொது மருத்துவம், வைட்டமின் குறைபாடுகள், சர்க்கரை நோய், ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் கர்ப்பப்பை மற்றும் வாய் புற்றுநோய் கண்டறிய சிறப்பு பரிசோதனை, கண் நோய்கள் போன்ற அனைத்து நோய்களுக்குமான பரிசோதனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் இலவசமாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
பரிசோதனையில் சுமார் முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சம்சுஜாசின், சிவநந்தினி, மும்மூர்த்தி, கதிஜா, ரோஹித் குமார் ஆகியோரின் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். முகாமில் 2 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. மக்களை தேடி பார்த்தோம் திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் மகேஷ்குமார் நன்றி கூறினார்.
உங்கள் கருத்தை பதிவிடுக