Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

ஓட்டப்பிடாரம் அருகே இருசக்கர வாகனம் டிராக்டர் மோதல் சிறுவன் உயிரிழப்பு - மணியாச்சி போலீசார் விசாரணை

Copied!
Nigazhvu News

ஓட்டப்பிடாரம் அருகே சங்கம்பட்டியை சேர்ந்த சீனிவாசன் மகன் சதீஷ்குமார் (20) என்பவரின் இரு சக்கர வாகனத்தை அதே பகுதியைச் சேர்ந்த தங்கமுத்து மகன் செல்வராஜ் (16) என்ற சிறுவன், சதீஷ்குமாரை பின்னாடி ஏற்றிக்கொண்டு செப்டம்பர் 23 அன்று இரவு குலசேகரநல்லூரை நோக்கி சென்றுள்ளனர்.


அப்போது முறம்பன் கல் பாலம் அருகே சென்றபோது எதிரே முறம்பன் கிராமத்தைச் சேர்ந்த செந்தூர் கனி (50) என்பவர் ஓட்டிச் சென்ற டிராக்டரும் இருசக்கர வாகனமும் எதிர்பாராத மோதி விபத்துக்குள்ளானது.




இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற செல்வராஜ், சதீஷ்குமார் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் செல்வராஜ் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து மணியாச்சி காவல் நிலைய காவல் நிலைய ஆய்வாளர் காவல் ஆய்வாளர் சுதந்திரதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே சாலையோரமாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் பலத்த காயம் - புதியம்புத்தூர் போலீசார் விசாரணை

கோவில்பட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசன போட்டி 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு - வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்!!

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்