மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்-ன் 72-வது பிறந்தநாள் விழாவானது தமிழகம் முழுவதும் கட்சியினர் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அதேபோல் இன்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக-வினர் சார்பில் கேப்டனின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக விளாத்திகுளம் அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்தில் மறைந்த தேமுதிமுக தலைவர் விஜயகாந்த்-ன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர் சுரேஷ் கட்சியின் கொடிக்கம்பத்தில் கொடியேற்றி இங்குள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கி சிறப்பித்தார். இதற்கிடையே சிங்கிலிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் களக்க ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன், புதூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் மணிகண்டன், விளாத்திகுளம் நகர செயலாளர் மணிகண்டன், கேப்டன் மன்ற செயலாளர் மேகலிங்கம், கோவில்பட்டி நகர செயலாளர் நேதாஜி பாலமுருகன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், சிங்கிலி பட்டி கிளைச் செயலாளர் சங்கரன், இளைஞர் அணி துணை செயலாளர் வீரோவன் உள்ளிட்ட ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக