Nigazhvu News
17 Mar 2026 3:24 AM IST

எட்டையபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த ரோடு ரோலர் வாகனம்!

Copied!
Nigazhvu News

தூத்துக்குடியில் மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில் இருந்து மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த ரோடு ரோலர் வாகனத்தை கடம்பூர் அருகே உள்ள திருமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் சுப்புராஜ் (62) ஓட்டி வந்துள்ளார்.


இந்த ரோடு ரோலர் வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென தீ பற்றி எரிந்து முற்றிலுமாக நாசமானது. இதைத் தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணியிடத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் அங்கு வந்தது எனக்கு வீரர்கள் கொழுந்து விட்டு இருந்து கொண்டிருந்த ரோடு ரோலர் வாகனத்தின் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். மேலும் வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஓட்டுநர் சுப்புராஜ் நல்வாய்ப்பாக எந்தவித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினார். இதன் காரணமாக தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. இச்சம்பவம் குறித்து எட்டையபுரம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் தீப்பற்றி என்பதற்கான காரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரத்தில், ரூ.6.50 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிறுத்தம் கட்டும் பணியை அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!

பணிக்கர் குளம் பள்ளி கட்டட திறப்பு விழா

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்