அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதியம்புத்தூர் கீழ தெருவில் ரூபாய் ஆறு லட்சத்து 89 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை, பங்களா தெருவில் ஒன்பது லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை, கே. ஆர். காம்பவுண்ட் தெருவில் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் யூனியன் பொது நிதியிலிருந்து புதியம்புத்தூர் நடுவக்குறிச்சியில் ரூபாய் ஏழு லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர் மணி, ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் சிவன், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல்சாமி, மாவட்ட ஆதி திராவிடர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி, வர்த்தக அணி முத்துக்குமார், நெசவாளர் அணி ஈசன் சுரேஷ், சிறுபான்மை அணி ஞானதுரை , மாணவரணி தங்கத்துரை பாண்டியன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நல்லமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் ,ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், இளைஞர் அணி ஜெகன், பார்த்திபன், கிளைச் செயலாளர்கள் பூவலிங்கம், பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக