ஓட்டப்பிடாரம் அருகே சில்லாநத்தம் ஊராட்சி நயினார்புரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிட கட்டிடம் கட்டும் பணிகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சில்லாநத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூபாய் 7,48,000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமையலறை கட்டிடத்தையும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளை வைத்து குத்து விளக்கு ஏற்றி மகிழ்ந்தார் .தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளையும் ஆய்வு செய்து தரமாகவும் விரைந்து பணிகளை முடிக்கவும் ஒப்பந்ததாரர்களை வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர் மணி, ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், ஒன்றிய துணை செயலாளர் சிவன், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல்சாமி, மாவட்ட ஆதி திராவிடர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி, வர்த்தக அணி முத்துக்குமார், நெசவாளர் அணி ஈசன் சுரேஷ், சிறுபான்மை அணி ஞானதுரை , மாணவரணி தங்கத்துரை பாண்டியன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நல்லமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் அருண்குமார் சரஸ்வதி திலிப் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் ,ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், இளைஞர் அணி ஜெகன், பார்த்திபன், கிளைச் செயலாளர்கள் பூவலிங்கம், பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக