Nigazhvu News
17 Mar 2026 3:24 AM IST

சொத்து பிரச்சினையில் மனைவி – மகனுக்கு அரிவாள் வெட்டு – 2 பேரிடம் போலீசார் விசாரணை– கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் பரபரப்பு

Copied!
Nigazhvu News

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் சொத்து பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் மகனுக்கு சரமாரி வெட்டு 2பேரிடம் போலீசார் விசாரணை 


தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சிந்தலக்கட்டை பகுதியை சேர்ந்தவர் வேலாயுத பெருமாள் (57), இவரது மனைவி முத்துமாரி(58), இவர்களது மகன் ராமச்சந்திரன்(38). வேலாயுத பெருமாள் மற்றும் அவரது மகன் ராமச்சந்திரன் இடையே சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வருவதாக தெரிகிறது. வேலாயுத பெருமாள் பெயரில் உள்ள 16சென்ட் நிலத்தினை தனது பெயருக்கு எழுதி தரும்படி அவருடைய மகன் ராமச்சந்திரன் எழுதி கொண்ட வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் வேலாயுத பெருமாள் மற்றும் அவரது நண்பர் கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த அந்தோணி இருவரும் நின்று கொண்டு இருந்த பொழுது, வேலாயுத பெருமாள் மனைவி முத்துமாரி மற்றும் அவரது மகன் ராமச்சந்திரன் இருவரும் 16 சென்ட் இடத்தினை எழுதி தரும்படி கேட்டுள்ளனர்.

இதனால் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே வேலாயுதபெருமாள் தான் ஏற்கனவே வைத்திருந்த அரிவாளை கொண்டு அவரது மகன் ராமசந்திரனை வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த முத்துமாரியை, அந்தோணி தடுத்தாக தெரிகிறது. முத்துமாரிக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனைப்பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து அரிவிள் வெட்டில் காயமடைந்த ராமச்சந்திரன் மற்றும் அவரது தாய் முத்துமாரி இருவரையும் மீட்டு சிகிச்சைகாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் வேலாயுத பெருமாள், அந்தோணி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துப்பிரச்சினையில் மனைவி, மகன் மீது அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.



உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

வண்டல் மண் என்ற பெயரில் சரள் மண் கொள்ளை என பொது மக்கள் விவசாயிகள் குற்றச்சாட்டு

புதிய பயணியர் நிழற்குடைக்கு அடிக்கல் நாட்டிய விளாத்திகுளம் MLA மார்கண்டேயன்!

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்