Nigazhvu News
08 May 2025 11:01 AM IST

வண்டல் மண் என்ற பெயரில் சரள் மண் கொள்ளை என பொது மக்கள் விவசாயிகள் குற்றச்சாட்டு

Copied!
Nigazhvu News

வண்டல் மண் என்ற பெயரில் சரள் மண் கொள்ளை என பொது மக்கள் விவசாயிகள் குற்றச்சாட்டு - விளாத்திகுளம் அருகே வாகனங்களை சிறைப்பிடித்து பொது மக்கள் போராட்டம் - பரபரப்பு


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள உருளைகுடியில் 96 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் ஒன்று உள்ளது. இந்த கண்மாய் பகுதியில் இன்று சிலர் கனரக வாகனங்களை வைத்து சரள் மண் எடுத்து கொண்டு இருப்பதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று வாகனங்களை சிறை பிடித்துஇ சரள் மண் எடுப்பதற்கு யாரிடம் அனுமதி பெற்றுள்ளீர்கள்இ அதற்கான அனுமதி சீட் எங்கே என்று கேள்வி கேட்டதும்இ அங்கிருந்தவர்கள் முன்னுக்கு பின்னாக தகவல் கூறியதை தொடர்ந்து அப்பகுதி பொது மக்கள் நாலாட்டின்புதூர் காவல் நிலையம் மற்றும் எட்டயபுரம் தாலூகா அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையெடுத்து சரள் மண் அள்ளியவர்கள் வாகனங்களை விட்டுஇ விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளனர்.


இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் 96 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயை நம்பி 200 ஏக்கர் அளவில் விவசாயம் செய்து வந்தோம்இ நெல் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வந்த நிலையில் தொடர்ந்து கண்மாயில் சரள் எடுப்பதால் நீர் வரத்து தடைப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்ய முடியவில்லை என்றும்இ தற்பொழுது 40 ஏக்கர் வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்றுள்ளதாக கூறிவிட்டு சரள் எடுத்து வருவதாகவும்இ இதனால் தங்களது பகுதியில் மேலும் விவசாயம் பாதிக்கப்படும் நிலை இருப்பதாகவும்இ தற்பொழுது வாகனங்களை சிறைப்பிடித்து வைத்து இருப்பதாகவும்இ அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்று தெரியவில்லை என்றனர்.




விவசாயிகள் பயன்பெறுவதற்காக தமிழக அரசு கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க அனுமதித்துள்ள நிலையில் சிலர் அந்த அனுமதியை தவறாக பயன்படுத்தி சரள் மண் அள்ளி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அனுமதி கொடுப்பது மட்டுமின்றிஇ அனுமதிக்கப்பட்ட அளவு அள்ளப்படுகிறதாஇ வண்டல் மண் தவிர வேறு எதுவும் கனிமவளங்கள் சுரண்டப்படுகிறதா என்பதனை பல இடங்களில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் தெப்பக்குளம் அருகே இருசக்கர வாகனம் மீது குட்டி யானை வாகனம் மோதியதில் ஒருவர் காயம் - ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை

சொத்து பிரச்சினையில் மனைவி – மகனுக்கு அரிவாள் வெட்டு – 2 பேரிடம் போலீசார் விசாரணை– கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் பரபரப்பு

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்