Nigazhvu News
07 May 2025 6:55 PM IST

ஓட்டப்பிடாரம் தெப்பக்குளம் அருகே இருசக்கர வாகனம் மீது குட்டி யானை வாகனம் மோதியதில் ஒருவர் காயம் - ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி பி.என்.டி காலனி மூன்றாவது தெருவை சேர்ந்த ஆனந்த் (27) என்பவர் புரோகிதராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 8 அன்று ஓட்டப்பிடாரம் சுந்தரலிங்கம் நகரில் உள்ள  காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்து  கும்பாபிஷேக பணிகளை முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் ஓட்டப்பிடாரம் தெப்பக்குளம் அருகே வந்து கொண்டிருந்தார்.


அப்போது எதிரே ஓட்டப்பிடாரம் அருகே வடக்கு கைலாசபுரம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (37) என்பவர் ஓட்டி வந்த குட்டியானை வாகனம் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் மீது மோதியதில்  ஆனந்திற்கு தலை மற்றும் வலது கையில் இரத்த காயம் ஏற்பட்டது. இதை அடுத்து  அருகில் இருந்தவர்கள் ஆனந்தை மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து  ஓட்டப்பிடாரம் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

சாத்தான்குளம் பழைய பஸ் நிலையத்தில் ரூ10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

வண்டல் மண் என்ற பெயரில் சரள் மண் கொள்ளை என பொது மக்கள் விவசாயிகள் குற்றச்சாட்டு

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்