Nigazhvu News
07 May 2025 12:26 AM IST

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

Copied!
Nigazhvu News

சாத்தான்குளம் அருகே உள்ள  பழனியப்பபுரம்  மேலத்தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் மனைவி செல்லம்மாள் வயது 74. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செல்லம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரது மகன் ஆரிஸ் பாண்டி  வயது 56  அவரே வீட்டில் வைத்து கவனித்து வந்தார்.


செல்லம்மாள் அவ்வப்போது வீட்டிலிருந்து வெளியே சென்று மீண்டும் திரும்ப வந்து விடுவார். இந்நிலையில்  கடந்த ஆறாம் தேதி  மாலை ஆரிஸ் பாண்டி வீட்டில் வந்து பார்த்தபோது  செல்லம்மாளை  காணவில்லை. அப்பகுதியில் தேடிப் பார்த்தபோது வடக்கு புரம் உள்ள தேர்க்கன்குளம் கணபதி என்பவருடைய கிணற்றில்  தவறி விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து  சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர்  ஏசு ராஜசேகரன்  உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் விரைந்து வந்து  செல்லம்மாள் உடலை கைப்பற்றி  சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து  ஆரிஸ் பாண்டி  சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார்  புகார் பேரில்  எஸ் ஐ ஸ்ரீதர் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன் விசாரணை நடத்தி வருகிறார்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

தோழர் சீதாராம் யெச்சூரி உருவப் படத்திற்கு விளாத்திகுளம் MLA மார்கண்டேயன் மரியாதை!

சாத்தான்குளம் பழைய பஸ் நிலையத்தில் ரூ10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்