தமிழ்நாடு அரசால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா ஓட்டப்பிடாரம் அருகே குறுக்கு சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு 107 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
தொடர்ந்து குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூபாய் 76.73 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பணிகளையும் எம்எல்ஏ சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் எம்எல்ஏ சண்முகையா பேசுகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதைப்போல் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி கற்கச் செல்லும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது . தற்போது தமிழ் புதல்வன் திட்டம் என்ற பெயரில் மாணவர்களுக்கும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . மாணவச் செல்வங்கள் நீங்கள் நல்ல படிக்க வேண்டும். மேலும் நாம் என்ன படிக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு படிக்க வேண்டும். ஐஏஎஸ் ஐபிஎஸ் சயின்டிஸ்ட் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். அப்படி எண்ணத்தை உருவாக்கினால் நாம் வெற்றி பெறுவது உறுதி. போட்டி போட்டு படிக்க வேண்டும், கல்வி என்பது அழியாத சொத்து அதை யாராலும் வாங்க முடியாது.
மாணவர்களாகிய நீங்கள் சைக்கிள் ஓட்டுவதால் ஆரோக்கியமாக இருக்கலாம் நோய் நொடி இல்லாமல் வாழலாம். மாணவ மாணவிகள் தாய் தந்தையர் மற்றும் ஆசிரியர்களுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். மேலும் குறுக்கு சாலையில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி வழியாக ஓட்டப்பிடாரத்திற்கு பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி மாலை 5 மணி அளவில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ஆனந்த் பள்ளி தலைமை ஆசிரியர் அன்னலட்சுமி , மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக