ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியபுரம் டோல்கேட்டில் அதிக கட்டணம் வசூலித்ததாக கூறி லாரி டிரைவர்கள் டோல்கேட்டில் லாரியை நிறுத்தி வைத்ததால் போக்குவரத்து பாதிப்பு - புதியம்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
தூத்துக்குடி குருவிமேடு பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பவர் ஓட்டி சென்ற லாரி உட்பட மூன்று லாரிகள் ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியபுரம் டோல்கேட்டி க்கு வந்துள்ளது. அப்பொழுது அதிக கட்டணம் வசூலித்ததாக கூறி லாரி டிரைவர்கள் டோல்கேட்டில் லாரியை நிறுத்தி வைத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் மேலாளர் புதுடெல்லியைச் சேர்ந்த அவதேஸ்சிங் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், புதியம்புத்தூர் போலீசார் டோல்கேட் பகுதியில் லாரியை நிறுத்தி போக்குவரத்திற்கு இடைஞ்சல் செய்ததாக லாரியை ஓட்டி சென்ற அந்தோணி உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக