Nigazhvu News
09 May 2025 6:59 PM IST

ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் ஊட்டச்சத்து உணவு திருவிழா

Copied!
Nigazhvu News

தமிழ்நாடு அரசின் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தூத்துகுடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் சார்பில் வட்டார அளவிலான ஊட்டச்சத்து உணவு திருவிழா இன்று ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார். மேலும் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தயார் செய்து வைத்திருந்த உணவு வகைகளையும் பார்வையிட்டார். 


 ஊட்டச்சத்து உணவு திருவிழாவில் முதல் பரிசை கீழமுடிமன் இந்திரா குழுவினரும்  இரண்டாம் பரிசை ஓட்டப்பிடாரம் தங்க விநாயகர் குழுவினரும் மூன்றாம் வரிசை அக்கநாயக்கன்பட்டி தேசிய கீதம் குழுவினரும் பிடித்தனர். அவர்களுக்கு பரிசுகளையும் யூனியன் சேர்மன் ரமேஷ் வழங்கினார்.


 நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் வசந்தா, வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி ,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பச்சை பெருமாள், வட்டார மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் சண்முகத்தாய் மேகலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர்கள் அருண்குமார், லதா முருகன் பெருமாள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியபுரம் டோல்கேட்டில் அதிக கட்டணம் வசூலித்ததாக கூறி லாரி டிரைவர்கள் டோல்கேட்டில் லாரியை நிறுத்தி வைத்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஓட்டப்பிடாரம் அருகே தருவைகுளத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்