Nigazhvu News
10 May 2025 1:03 PM IST

விளாத்திகுளம் அருகே மாணவர்களை தாக்கியதாக ஆசிரியர் பணியிடை நீக்கம்!

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மேலநம்பியபுரம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 45 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். 


3 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியில் பணியாற்றி வரும் ராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியர் விடுமுறை தினங்களில் தங்களது பெற்றோர்களுடன் கண்மாய்க்கு குளிக்க சென்றதாக 7 மாணவர்களை அடித்தாக, மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 


ஆசிரியர் அடித்தால் தங்களது குழந்தைகளின் உடலில் தடிப்புகள் ஏற்பட்டு அவர்கள் சிரமப்பட்டு வருவதாகவும் மாணவர்களை அடித்த ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர்களின் குற்றச்சாட்டினை தொடர்ந்து கல்வி துறை அதிகாரிகள் பள்ளியில் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஆசிரியர் ராதாகிருஷ்ணன் மாணவர்களை அடித்தது உண்மையான நிலையில்,தற்போது ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்ய, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

கோவில்பட்டி அருகே பேருந்து நிறுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

விடுமுறையில் பெற்றோருடன் கண்மாயில் குளிக்க சென்ற மாணவர்களை ஆசிரியர் தாக்கியதாக குற்றச்சாட்டு!

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்