தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டு ஓட்டப்பிடாரம் நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் பெருமளவில் சேதமடைந்தன. மேலும் இச்சாலைகளை சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வரும் காலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்காத வண்ணம் பாளையங்கோட்டை- குறுக்குசாலை - குளத்தூர் - விளாத்திகுளம் - பந்தல்குடி - அருப்புக்கோட்டை சாலை, வெள்ளாரம் - குமரட்டியாபுரம் சாலை, குறுக்குச்சாலை - கோட்டூர் சாலை மற்றும் இதர சாலைகளில் கான்கிரீட் பாலம் மற்றும் தடுப்பு அமைக்கும் பணியானது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் சவுக்கு கம்புகள் மற்றும் இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பினும் வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இன்று வேடநத்தம் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது இதுகுறித்து நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஆறுமுக நைனார் ஆலோசனையின் படி உதவி செயற்பொறியாளர் பொறியாளர்கள் சுரேஷ்குமார் திலிப் குமார் ஆகியோர் சாலை அமைக்கும் பணிகளை வேகமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக