ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தின் சார்பாக தேசிய ஊட்டச்சத்து தின விழா குறுக்குசாலை கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் இளங்குமரன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு சொற்பொழிவாளர் லதா, ஒருங்கிணைந்த சேவை மையம் கோவில்பட்டி நிர்வாக அலுவலர்கள் பொன்மாரி மற்றும் பிரியாதேவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் ஊட்டச்சத்தின் அவசியம் ரத்தசோகை நீக்கக்கூடிய வழிமுறைகள் குறித்த பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டு பார்வையிடப்பட்டது. முடிவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா நன்றியுரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மேற்பார்வையாளர்கள் கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சியின் கண்காட்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு நாட்டுப்பண்னுடன் விழா நிறைவு பெற்றது.
உங்கள் கருத்தை பதிவிடுக