Nigazhvu News
24 Nov 2024 1:40 AM IST

Breaking News

விளாத்திகுளத்தில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் : தமிழகத்திலேயே முதல்முறையாக அதிக அளவில் கலந்து கொண்ட 116 ஜோடி மாடுகள்!

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், விளாத்திகுளம் வட்டார விஸ்வகர்மா மக்கள் சார்பாக, திரையுலக முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் விஸ்வகர்மா ஆதாரனை ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது. 

இந்த மாபெரும் மாட்டு வண்டிகள் எல்கை பந்தயத்தை விளாத்திகுளம் அதிமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், விஸ்வகர்மா சமுதாய தலைவர்கள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சின்னமாடு,பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், ராமநாதபுரம், சிவகங்கை,தேனி, கம்பம்,புதுக்கோட்டை,திருநெல்வேலி, விருதுநகர்,மதுரை,போடி,தூத்துக்குடி, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 116 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சிரிப்பாய்ந்தன, நடைபெற்ற இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் மாட்டு வண்டிகள் ஒன்றை ஒன்று சீறிப்பாய்ந்து முந்தி செல்லும் காட்சிகளை சாலையின் இரு புறமும் என்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் போட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்று வருகிறது, ஆனால் அதிகப்படியாக 65 முதல் 70 ஜோடி மாடுகள் மட்டுமே இதுவரை போட்டியில் கலந்து கொண்டன.




ஆனால் இன்று நடைபெற்ற போட்டியில் மட்டும்தான் 116 ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன என்று மாட்டுவண்டி எல்கைப்பந்தய சங்கத்தினர் கூறியுள்ளனர்.


விழாவுக்கான ஏற்பாட்டினை கோவில் குமரட்டையாபுரம் பாலகுரு குருராஜ் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

கோவில்பட்டி அருகே கட்டிட தொழிலாளி வெட்டி படுகொலை - 2 பேர் கைது

ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியாபுரம் சாலையோரத்தில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாயில் இறந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு; புதியம்புத்தூர் போலீசார் விசாரணை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!