Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில் நூலகம் அமைக்க வேண்டாம்: பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

Copied!
Nigazhvu News
பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில் நூலகம் அமைக்க வேண்டாம்: பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

"தேனி மக்கள் கடவுளாகப் போற்றும் பென்னிகுவிக்கின் நினைவு மண்டபத்தில், கருணாநிதி நுாலகம் அமைக்க வேண்டாம். மக்களின் எண்ணங்களுக்கும், மன உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நுாலகத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்" என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் " ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக் தென் மாவட்டங்களின் வறட்சியை நீக்கி, பசுமையை நிலைக்க செய்தார். அன்றைய ஆங்கில அரசு அணை கட்டும் முயற்சியைக் கைவிட்டபோதும், தன்னுடைய சொந்த செலவில், தமிழ்நாட்டு  மக்களுக்காக அணை கட்டி கொடுத்தவர் பென்னி குவிக். 


மனித தெய்வமாக வணங்கப்படும் தன்னமலற்ற அந்த தியாக உள்ளத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், மதுரை -நத்தம் சாலையில், அன்னாரின் நினைவாக, இரண்டு ஏக்கரில் நினைவு மண்டபம்  அமைக்கப்பட்டது. 

தற்போது புதிதாக ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் தி.மு.க. அரசு, பென்னி குவிக் நினைவு மண்டபத்தில், கருணாநிதியின் பெயரால் ஒரு நுலகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு, தென் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளையும், பொது மக்களையும் வெகுவாகப் பாதித்து இருக்கிறது.

 முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிறப்பு செய்ய நினைக்கும் தி.மு.க அரசுக்கு, அவரின் பெயரில் நுாலகம் அமைக்க, வேறு எந்த கட்டடமும் கிடைக்கவில்லையா என தென் மாவட்ட மக்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் " புத்தகங்கள் வரலாற்று பெட்டகங்கள்தான். ஆனால், அது இன்னொரு வரலாற்றுச் சின்னத்தை அழித்து உருவாக்கப்பட வேண்டுமா என்றும், மக்கள் போராடத் தயாராகி வருகின்றனர். 

கருணாநிதி பெயரால் அமையும் நுாலகத்தை, மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். இதை தான், அவரின் ஆன்மாவும் விரும்பும். மக்களின் எண்ணங்களுக்கும், மன உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, கருணாநிதி பெயரால் அமையும் நுாலகத்தை, மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

தூத்துக்குடிக்கு சப்கலெக்ட்ராகும் பிரபல நடிகரின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன்

"தமிழ்மொழி வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் தேவை " : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் அறிக்கை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்